
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு எதிராக செயற்பட்டு ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக தன்னை அர்ப்பணித்து, பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து மீண்டும் அரசியலில் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்டத் தலைமைப் பொறுப்பை ஏற்க தான் தயார் எனவும் லொஹான் ரத்வத்த மேலும் தெரிவித்தார்.
அதனைத் தெரிவிக்கும் வகையில் நேற்று (11) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கைலேயே அவர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை எனவும், பல அசம்பாவிதங்கள் காரணமாக கண்டியில் உள்ள கட்சி அலுவலகம் மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்த லொஹான் ரத்வத்த, எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு முழுமையாக பங்களிப்பதாகவும் வலியுறுத்தினார்