
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 24 ஆம் திகதி முதல் மார்ச் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான இறுதி நாள் மார்ச் 26 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.