
உள்ளூராட்சித் தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 06 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, மாத்தளை பொலிஸ் பிரிவில் இருந்து மூன்று முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுவே அதிக எண்ணிக்கையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 3 முறைப்பாடுகளும் கெபிதிகொல்லாவ, பொலனறுவை மற்றும் மொனராகலை பொலிஸ் பிரிவுகளிலிருந்து பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், வேட்பாளர்களின் படங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டுதல், அரசியல் கட்சிகளின் கொடிகளை காட்சிப்படுத்துதல், உலர் உணவு விநியோகம் மற்றும் புதிய தெரு விளக்குகள் பொருத்துதல் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.