உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே, ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்து அரசியல் தஞ்சம் அடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே அவர்களிடம் ஜனாதிபதி கேள்வி கேட்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) வலியுறுத்தியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத்துறையின் இயக்குநர் ஷானி அபேசேகர மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்தபோது முக்கிய பதவிகளை வகித்த முன்னாள் மூத்த அதிகாரி ரவி செனவிரத்ன போன்றவர்கள், என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பதை நன்கு அறிவார்கள்.

ஆகவே, அரசாங்கம் முதலில் அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.

அத்துடன், தேசிய மக்கள் முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரின் இரண்டு மகன்கள் தாக்குதலில் ஈடுபட்டனர் என்பது தெரிந்த உண்மையாகும்.

இந்த நிலையில், அரசாங்கம் முழுப் பிரச்சினையையும் அரசியலாக்குவதற்குப் பதிலாக, சம்பவங்கள் உண்மையில் எப்படி நடந்தன என்று அவரிடம் கேட்க வேண்டும் என்று நாமல் கூறியுள்ளார்.

எனவே, உண்மையான குற்றவாளிகள் அரசாங்கத்திற்குள் இருக்கும்போது, குற்றவாளிகள் யார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடம் கேட்பது அர்த்தமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *