
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் நேற்று (11) இரவு உயிரிழந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளொன்று கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்றின் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், டிப்பர் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை நீதிமன்றம் நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர்.