
பேருவலை நகர சபை மற்றும் பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மருதானையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றினார்.
பேருவளை ஐக்கிய மக்கள் சக்தி பிரதம அமைப்பாளர் இப்திகார் ஜமீல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் நகர பிதா மஸாஹிம் முஹம்மத் , முன்னால் உப நகர பிதாக்களான ஹஸன்பாஸி , விமலசிரி சில்வா உட்பட வேற்பாளர்கள், முன்னால் எம்.பி.க்களான லக்ஷ்மன் விஜேமான்ன , எம்.எஸ்.எம். அஸ்லம் ஐக்கிய மக்கள் சக்தி பிரதி பொருலாளர் டாக்டர் ரூமி ஹாசிம், முன்னால் மாகான சபை உருப்பினர் எம்.எம். அம்ஜாத் உட்பட பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஹெட்டியாகந்த வட்டார வேட்பாளர் மிஷ்பிர் சாபியின் தேர்தல் காரியாளயமும் எதிர் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவினால் திறந்து வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.