
நவம்பர் – டிசம்பர் மாதங்களுக்குள் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.தனக்குத் தெரிந்த பொருளாதாரத்தின்படி, இது நிச்சயமாக நடக்கும் என்று அபேவர்தன தெரிவித்தார்.
ஆனால் மக்கள் அதைப் பற்றி பயப்படத் தேவையில்லை என்று கூறிய அவர், “இலங்கை வீழ்ச்சியடையும் போது நாங்கள் அதைப் பார்த்துக் கொள்வோம்” என்றும் கூறினார்.நாடு வீழ்ச்சியடையும் போது, தான் அந்த இடத்தைப் பிடித்தாலும் இல்லாவிட்டாலும், அதைக் காப்பாற்ற முன்வருவேன் என்றும் வஜிர அபேவர்தன கூறினார்.
காலி, தலப்பிட்டி பிரிவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.