கடந்த காலங்களில் இனவாதம் பேசிய அரசியல் கட்சிகள் ,இன்று சுயாதீன போர்வையில் வந்துள்ளதாகவும் , இனவாத அரசியல் இனி எப்போதும் வெல்லாது மக்கள் விழித்து விட்டனர் என்றும் பேருவளை நகரசபை வேட்பாளர் முஹம்மத் அதீக் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், இதுவரை காலமும் அரசியலில் ஈடுபடாத நாம் இம்முறை எமது ஊரை ,ஊழல் கும்பலிடமிருந்து மீட்பதற்காக அரசியல் களத்தில் பிரசன்னமாகி உள்ளோம். இதுவரை காலமும் பேருவளை நகரசபை இரண்டு குடும்பங்களில் கைகளில் மாறியதே தவிர பல தசாப்தங்களாக எந்தவித அபிவிருத்தியும் அடையவில்லை.

மக்களின் குப்பைகளை அகற்றும் பணிகள் கூட இடம்பெறாமல் மக்கள் அவஸ்தைபடும் அளவிற்கு ஊரின் அபிவிருத்தி குன்றியுள்ளது.

இம்முறை நகரசபை தேர்தலில் பேருவளை நகரசபையை ,தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி ஊழலற்ற நிர்வாகம் அமைப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *