ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) மேதினக் கூட்டத்தை சீர்குலைத்து விட்டதாக அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மீது கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம்(01) தலவாக்கலையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வின் போது , மூத்த தலைவர்கள் பலரும் உரையாற்றக் காத்திருந்த நிலையில், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசா இரண்டவதாக உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையை முடித்துக் கொண்டவுடன் , அவசர வேலையொன்றுக்காக செல்ல வேண்டியிருப்பதாகத் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் உரைக்குப் பின்னர் கட்சியின் ஒருங்கிணைப்பு பிரதானி துஷார இந்துனில், கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மூத்த அரசியல்வாதியான ஹர்ச டி சில்வா ஆகியோர் உரையாற்ற காத்திருந்த நிலையில், சஜித் அங்கிருந்து புறப்பட்டதை அடுத்து பொதுமக்களும் கலைந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக மூத்த தலைவர்களின் உரையின் போது மைதானம் வெறிச்சோடிக் காணப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மே தின நிகழ்வுக்கு வருகை தருவதாயின் நிகழ்வின் கடைசி நிமிடம் வரை அங்கிருக்க வேண்டும் என்றும், வேறு வேலைகளுடன் அவ்வாறான நிகழ்வுகளுக்கு வருகை தருவதை சஜித் பிரேமதாச நிறுத்த வேண்டும் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *