
கல்கிஸை பொலிஸ் பிரிவின் ஹுலுடகொட வீதியில் கூரிய ஆயுதத்தால் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலாம் திகதி மதியம் இடம்பெற்ற இக்கொலை சம்பவம் தொடர்பில் மேலும் மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு இந்த குற்றம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவர் நேற்று (04) கொட்டாவ பொலிஸ் பிரிவின் மக்கும்புர பஸ் நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கல்கிஸை பிரதேசத்தைச் சேர்ந்த 31, 32 மற்றும் 34 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 02 வாள்கள் மற்றும் ஒரு தொலைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.