கடவத்தை பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் காலை உணவுக்காகக் கொண்டு உணவில் இரண்டு பொதி கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது மாணவன் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது குறித்த பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் இது குறித்து வகுப்பு ஆசிரியருக்குத் தெரிவிக்கப்பட்ட பின்னரே விடயம் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து ஆசிரியர் மாணவனின் தாயாருக்கு தொலைபேசியில் அழைத்து சம்பவம் தொடர்பில் விளக்கியதாகவும், அதன் பின்னர் உணவை வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சம்பந்தப்பட்ட உணவானது பேக்கரி பொருட்கள் விற்கும் முச்சக்கர வண்டியில் இருந்து வாங்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் முச்சக்கர வண்டியில் ஓட்டுநர் பேக்கரி பொருட்களை விற்பனை செய்கிறேன் என்ற போர்வையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேறு ஒரு நபருக்கு வழங்கப்படவிருந்த கஞ்சாப்பொதி அடங்கிய உணவே தவறுதலாக குறித்த மாணவனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *