
பிலிப்பைன்ஸில்இடைக்கால தேர்தல் இன்று நடைபெறவுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தேர்தலில் சுமார் 68 மில்லியன் மக்கள் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்ததேர்தலில் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் ‘பாங்பாங்’ மார்கோஸ் ஜூனியரின் ஆதரவு பெற்ற கட்சியின் வேட்பாளர்களும், துணை ஜனாதிபதி சாரா டுடெர்ட்டின் ஆதரவு பெற்ற கட்சியின் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
அந்நாட்டுநேரப்படி காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணிவரை வாக்களிப்பதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதையபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் கட்சி வெற்றி பெறுமாயின், மாநில நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்படும் துணை ஜனாதிபதி சாரா டுடெர்ட்டேவை பதவி நீக்குவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு கைது செய்யப்பட்டால் அவர் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.