Author: admin

புதிய அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் தாமதமின்றி திருப்பி ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிகளைப் பெற்ற முன்னாள் எம்.பி.க்களுக்கு, தனித்தனியாகக் கடிதம் அனுப்பியுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அண்மையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில்…

வரி செலுத்தாதவர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு

2023-2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை செலுத்தி முடிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை அனைத்து வருமான வரிகளையும் செலுத்தி முடிக்க திணைக்களம் அவகாசம் வழங்கியுள்ளதுடன், உத்தரவை…

தேசியப் பட்டியலுக்கு உத்தரவாதம் இல்லை! சஜித் இறுக்கமான நிலைப்பாடு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடும் பங்காளிக் கட்சிகள், தேர்தலுக்கு முன்னரே கோரும் தேசியப்பட்டியல் ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதமளிக்காதிருக்க கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்திருப்பதாக அறியமுடிகின்றது. ஐக்கிய மக்கள் கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம்…

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

பாணந்துறை வடக்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது பாணந்துறை பள்ளியமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் வீதித்தடையில் லொறி ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் குறித்த லொறி பொலிஸாரின் உத்தரவை மீறி…

மிருகக் காட்சி சாலையை பார்வையிட விசேட அனுமதி

ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் இலவசமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை வளாகத்தில் காலை 8.30 மணி முதல்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100…

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய தீர்மானம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது முன்கூட்டியே பகிரப்பட்டதாகக் கூறப்படும் வினாத்தாளில், சம்பந்தப்பட்ட மூன்று கேள்விகளுக்கு மாத்திரம் , அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்

இடி மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் பல மாகாணங்களுக்கு கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்ககை விடுத்துள்ளது மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 39,137 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை 16,511 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையளம் காணப்பட்டனர். இம்மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கு…

பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் இல்லை

முட்டையின் விலை குறைக்கப்பட்டாலும் முட்டை தொடர்பான பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலையில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே பேக்கரி உற்பத்திகளின் விலைகள் திருத்தப்படும் என அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன…