Month: December 2024

அரச சேவை ஆட்சேர்ப்பு தொடர்பில் மீளாய்வு – அரசாங்கம் அவசர தீர்மானம்

ஆணைக்குழுக்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சபை நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளின் ஆளணியை மீளாய்வு செய்து இன்றியமையாத ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் சேவை தேவைகளுக்கு ஏற்ப ஆளணியை மீள நிலைப்படுத்தி உயர் சேவையைப் பெறுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை…

ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் சிறுவர்கள் தொடர்பான தடை

2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களை உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் இடம்பெறச் செய்வது தடைசெய்யப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.இது தொடரபில். வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஒரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.…

அடுத்த ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

2025 ஆம் ஆண்டில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, கற்றல் உபகரணங்கள் கொள்வனவிற்காக பாடசாலை மாணவர்களிற்கு கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பாடசாலை மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கங்களை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனூடாக பாடசாலைக்…

தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிக்கை

முன்பதிவு செய்யப்பட்ட தொடருந்து இருக்கைகளுக்கான பயணச்சீட்டு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் தொடருந்து திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை…

அரச ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுமா! அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு

அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை 36 வீதத்தினால் குறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இந்த குற்றச்சட்டை சுமத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின்…

அரசாங்க அச்சக இணையம் மீது சைபர் தாக்குதல்

அரசாங்க அச்சகத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அதன் சேவை முடங்கியுள்ளது. இணையத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொலிஸ் திணைக்கள யூ ரியூப் தளம் மீதும் சைபர் தாக்குதல் இடம்பெற்று அது முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி நிதிய அலுவலகம் இடமாற்றம்

டி. ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள லேக்ஹவுஸ் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பராமரிக்கப்பட்டு வந்த ஜனாதிபதி நிதிய அலுவலகம் புதிய கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. கொழும்பு 01, ஜனாதிபதி மாவத்தை, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கட்டிடத்தின் தரை தளத்தில்…

நெவில் சில்வா பிணையில் விடுதலை

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தினால் தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். 14 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கற்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை…

பாடசாலை பிள்ளைகளுக்கு எழுதுவினைப் பொருட்கள் கொடுப்பனவு

பொருளாதார நெருக்கடியின் பாதகமான முடிவுகளால் பிள்ளைகளின் கல்வியில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் நிகழ்த்திய “Household Survey on Impact of Economic Crisis – 2023″ தரவுக் கணக்கெடுப்பின் பிரகாரம் தெளிவாகிறது. அதன்…

இராணுவ, கடற்படைத் தளபதிகள் நியமனம்

இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் புதிய தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் தற்போதைய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே நாளை ஓய்வு பெறுவதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.…