Month: December 2024

நாகை – இலங்கை கப்பல் சேவை: புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பம்

நாகை – இலங்கை இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. தமிழகம் மற்றும் இலங்கை இடையே கப்பல் சேவை சுமார் 40 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில்,…

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம்

மட்டக்குளி சமித்புர பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி வாழைத்தோட்டம் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகார முறைமை இரத்து

புதிய அரசியலமைப்பினை கொண்டுவருவதற்கான ஆலோசனைகளை நடத்தி வரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ,அந்த புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்தாக்கி பாராளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி நிறைவேற்றதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை முன்னிறுத்த தீர்மானித்துள்ளது. இதற்கமைய அடுத்த…

பாடசாலை இடம்பெறும் நாட்களில் மாற்றம் – கல்வி அமைச்சு

அடுத்த ஆண்டிற்கான பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.வருடத்திற்கு 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் அடுத்த வருடத்தில் அதன் எண்ணிக்கையை 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.அதிகளவிலான அரசு விடுமுறைகளுடன் முதல் தவணை தொடங்குவதில்…

ஓய்வூதியம் வழங்கும் திகதி குறித்து விசேட அறிவிப்பு

அடுத்த ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கும் திகதியை ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் 10ஆம் திகதியும் ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் 9ஆம் திகதியும்…

“தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பம்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. “தூய்மையான இலங்கை” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர்…

மின்சாரம் தாக்கி மூவர் பலி

புத்தளம் பழைய மன்னார் வீதியின் 2ஆம் கம்ப பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் கட்டுமான தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அங்கு கட்டுமான தொழிலாளர்கள் தொழில் செய்யும் இரும்பில் இருந்தபோதே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 2ஆம் கம்ப பிரதேசத்தை…

சீகிரியாவைப் பாதுகாக்கும் விசேட திட்டத்திற்காக 2.4 பில்லியன் ரூபாவை வழங்கும் கொரியா

உலகப் பாரம்பரியச் சின்னமாக விளங்கும் சீகிரியாவைப் பாதுகாக்கும் விசேட திட்டத்திற்காக 2.4 பில்லியன் ரூபா அல்லது 240 கோடி ரூபாவை வழங்குவதற்கு கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. மத்திய கலாசார நிதியத்தின் மேற்பார்வையில் தொல்லியல் திணைக்களத்தின் பூரண அனுமதியுடன்…

மகாவலி கங்கையிலிருந்து சடலம் மீட்பு

பல்லேகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நத்தரம்பொத பிரதேசத்தின் மகாவலி கங்கையில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் 69 வயதுடைய கொலொங்கஹவத்த, கெங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேற்படி நபர் கடந்த 26ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ்…

Motivirus இன் மாபெரும் பட்டமளிப்பு விழா-2025

Motivirus Education & Training Center இன் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 2025 ஜனவரி 03ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு பிரதான மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி அளவில் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் KF.பஸீஹா பர்வின் தலைமையில் நடைபெற…