11 வயதுடைய கிளிநொச்சி மாணவனின் சாதனை பயணம் இன்று ஆரம்பமானது.
கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டிலோஜன் எனும் 11 வயதுடைய குறித்த மாணவன் இலங்கையை சுற்றி முழுமையாக நடை பயணம் ஒன்றினை இன்று ஆரம்பித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி சித்தியடையாத நிலையில், சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் குறித்த பயணத்தை இன்று ஆரம்பித்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக சமய நிகழ்வுகளுடன் ஆரம்பித்தது.இதன் முதல் கட்டமாக முல்லைத்தீவு நோக்கி தமது பயணத்தை தொடங்கவுள்ள நிலையில் குறித்த பயணத்தை குடும்ப உறுப்பினர்களும், சமயத்தலைவர்களும், பிரதேச மக்களுமாக இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.