மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் DLS முறைப்படி இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 38.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் ஆட்டமிழக்காமல் 82 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் கீசி கார்டி 58 பந்துகளில் 37 ஓட்டங்களையும் ரோஸ்டன் சேஸ் ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 33 ஓட்டங்களையும் பெற்றார்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் அணித் தலைவர் சரித் அசலன்க மற்றும் ஜெப்ரி வன்டர்சே தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

மழையின் இடையூறு காரணமாக DLS முறைப்படி இலங்கை அணிக்கு 37 ஓவர்களில் 232 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

குறித்த வெற்றி இலக்கு களமிறங்கிய இலங்கை அணி 31.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித் தலைவர் சரித் அசலன்க 71 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பெற்றார்.மேலும், இலங்கை அணி சார்பில் நிஷான் மதுஷ்க 54 பந்துகளில் 69 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்றார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் பந்துவீச்சில் குடாகேஷ் மோதி 3 விக்கெட்டுகளையும் அல்சாரி ஜோசப் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

இப் போட்டியின் நாயகனாக இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் அசத்திய சரித் அசலன்க தெரிவாகினர்.

இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *