மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாம் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரினை இந்திய அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியிற்கு முன்னர் மழையின் இடையூறு காரணமாக போட்டி 44 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 36 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 82 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் குடாகேஷ் மோதி ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 50 ஓட்டங்களையும் பிரண்டன் கிங் 18 பந்துகளில் 16 ஓட்டங்களையும் பெற்றார்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும் அசித பெர்ணான்டோ மற்றும் மஹீஷ் தீக்ஷன தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 38.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித் தலைவர் சரித் அசலன்க ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும் இலங்கை அணி சார்பில் நிஷான் மதுஷ்க 44 பந்துகளில் 38 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 50 பந்துகளில் 38 ஓட்டங்களையும் பெற்றார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் அணி சார்பில் பந்துவீச்சில் அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் ரோஸ்டன் சேஸ் மற்றும் குடாகேஷ் மோதி தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இப் போட்டியின் நாயகனாக இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய மஹீஷ் தீக்ஷன தெரிவாகினார்.
இரண்டு அணிகளும் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.