2024ம் ஆண்டுக்கான ஹொங்கொங் சிக்சஸ் தொடரின் இறுதிப் போட்டியில் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 17 வருடங்களின் பின்னர் ஹொங்கொங் சிக்சஸ் தொடரில் இலங்கை அணி சாம்பியனானது.
ஹாங்காங்கில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 5.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக முஹம்மது அக்லாக் 20 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், பாகிஸ்தான் அணி சார்பில் அணித் தலைவர் ஃபஹீம் அஷ்ரப் 4 பந்துகளில் 13 ஓட்டங்களையும் அமீர் யாமின் 2 பந்துகளில் 6 ஓட்டங்களையும் பெற்றார்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் தனஞ்சய லக்ஷன் மற்றும் தரிந்து ரத்நாயக்க தலா 2 விக்கெட்டுகளையும் அணித் தலைவர் லஹிரு மதுஷங்க மற்றும் நிமேஷ் விமுக்தி தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
73 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சந்துன் வீரக்கொடி 13 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் லஹிரு மதுஷங்க 5 பந்துகளில் 19 ஓட்டங்களையும் தரிந்து ரத்நாயக்க ஆட்டமிழக்காமல் 4 பந்துகளில் 16 ஓட்டங்களையும் பெற்றார்.
பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் அணித் தலைவர் ஃபஹீம் அஷ்ரப் மற்றும் ஹுசைன் தலாத் தலா 1 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினார்.
இப் போட்டியின் நாயகனாக இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய தனஞ்சய லக்ஷன் தெரிவாகினர்.
இத் தொடரின் நாயகனாக இலங்கை அணியின் தரிந்து ரத்நாயக்க தெரிவாகினர்.