பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

மெல்போர்ன் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித் தலைவர் முஹமது ரிஸ்வான் 71 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும், பாகிஸ்தான் அணி சார்பில் நசீம் ஷா 39 பந்துகளில் 40 ஓட்டங்களையும் பாபர் அசாம் 44 பந்துகளில் 37 ஓட்டங்களையும் பெற்றார்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களையும் அணித் தலைவர் பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்களையும் மார்னஸ் லபுஷேன் மற்றும் சீன் அபோட் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

204 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 33.3 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஜோஷ் இங்கிலிஸ் 42 பந்துகளில் 49 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும், அவுஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 46 பந்துகளில் 44 ஓட்டங்களையும் அணித் தலைவர் பாட் கம்மின்ஸ் ஆட்டமிழக்காமல் 11 பந்துகளில் 32 ஓட்டங்களையும் பெற்றார்.

பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் ஹரீஸ் ரவுப் 3 விக்கெட்டுகளையும் ஷஹீன் அப்ரீடி 2 விக்கெட்களையும் நசீம் ஷா மற்றும் முஹம்மது ஹஸ்னைன் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

இப் போட்டியின் நாயகனாக அவுஸ்திரேலிய அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய மிட்செல் ஸ்டார்க் தெரிவாகினர்.

இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *