பேருவளை பெருகமலை பகுதியில் தேர்தல் பிரசார அலுவலகமொன்றை ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் இப்திகார் ஜெமீல் திறந்து வைத்தார்.
அதனை அடுத்து பேருவளை பிரதேச சபை வேட்பாளர் இர்சாத் நிஸாம் தலைமையில் பிரசாரக் கூட்டமொன்று இடம் பெற்றது.களுத்துறை மாவட்ட வேட்பாளர்களான இஸ்திகார் ஜெமீல்,அஸ்லம் ஹாஜியார், களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் எம்.எம்.அம்ஜாத் முன்னாள் நகர சபை உறுப்பினர் சியாம் முனவ்வர்,பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் பைஸான் நைஸர்,பெருகமலை ஐக்கிய மக்கள் சக்தி கிளையின் முக்கியஸ்தர் யாஸ்மின் யாஸீன் உட்பட பல பிரமுகர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்த மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அமோக வாக்குகளினால் வெற்றி பெறச் செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.
என இங்கு உரையாற்றிய பிரமுகர்கள் வலியுறுத்தினர்.பெருகமலை பகுதிவால் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக அணிதிரண்டுள்ளதையும் பாராட்டி பேசினர்.