முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அந்தச் சட்டம் எக்காரணத்துக்காகவும் திருத்தப்படமாட்டது என்றும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
சமயங்களில் சார்ந்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சமய தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடியே அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் ஊடக சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டார்.