இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பொருட்களுக்கான வரியை தொடர்ந்தும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு கடந்த வருடம் நவம்பர்மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒரு வருட காலப் பகுதிக்கு 50 ரூபா விசேட வர்த்தக பொருட்களுக்கான வரி விதிக்கப்பட்டிருந்தது.
இந்த வரிக்காக கால எல்லை நவம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவுக்கு வரவிருந்ததுடன் குறித்த வர்த்தகப் பொருட்களுக்கான வரியை டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.