பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் பிரசார செலவுகள் உட்பட வருமானம் மற்றும் செலவு அறிக்கையை டிசம்பர் 06 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 06 இன் படி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் தேர்தல் பிரசார செலவுகள் உட்பட வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்க வேண்டும்.

மேலும், கட்சி/குழு மற்றும் வேட்பாளர் சார்பாக அன்பளிப்பாக வழங்கப்படும் பணம் அல்லது பரிசுப் பொருள் விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் செலவு அறிக்கைகள் டிசம்பர் 06 ஆம் திகதிக்கு முதல் அந்தந்த தேர்தல் அதிகாரி அலுவலகங்களிலும், தேர்தல் ஆணைக்குழுவின் இராஜகிரிய தலைமை அலுவலகத்திலும் கையளிக்க வேண்டும்.

வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட செலவு அறிக்கைகளில் உள்ள தகவல்கள் தவறானவை எனில், எந்த வாக்காளரும் உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *