
பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை என்பதால், குழந்தைகள் மீது பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் விடுமுறை இன்றுடன் நிறைவடைந்துள்ளதுடன், மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டப் பாடசாலைகள் அடுத்த வருடம் ஜனவரி 02 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
இன்றைய நாட்களில் பல குழந்தைகள் விடுமுறை நாட்களில் வீடுகளுக்குள்ளேயே அடைக்கப்பட்டு மின்னணு திரைகளுக்கு அடிமையாகிவிட்டனர்.
இதனால், ‘உளவியல் சமூக சூழலை’ இழந்து குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக, சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
கவலை, மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மைக்கு சிகிச்சை பெற மின்னணு திரைகளுக்கு அடிமையான குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மேலும், பல குழந்தைகள் தேவையற்ற இணையதளங்களை அணுகுவதும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, குழந்தைகள் மீதான தங்கள் பொறுப்பு குறித்து பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது சுகாதாரதுறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், இலத்திரனியல் திரை பாவனையினால் சிறுவர்கள் மத்தியில் கண் பார்வை குறைபாடுகள் அதிகரிப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்