அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 186 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடர்பில் இரு அணிகளும் 2:2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
லண்டன் லோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 312 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித் தலைவர் ஹாரி புரூக் 58 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும் இங்கிலாந்து அணி சார்பில் பென் டக்கெட் 62 பந்துகளில் 63 ஓட்டங்களையும் லியாம் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 62 ஓட்டங்களையும் பெற்றார்.
அவுஸ்திரேலிய அணி சார்பில் பந்துவீச்சில் ஆடம் ஜம்பா 2 விக்கெட்டுகளையும் கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் அணித் தலைவர் மிட்செல் மார்ஷ் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
313 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 24.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 23 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித் தலைவர் மிட்செல் மார்ஷ் 34 பந்துகளில் 28 ஓட்டங்களையும் அலெக்ஸ் கேரி 22 பந்துகளில் 13 ஓட்டங்களையும் பெற்றார்.
இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டுகளையும்பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும் அடில் ரஷித் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இப் போட்டியின் நாயகனாக இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அசத்திய ஹாரி புரூக் தெரிவாகினார்.
இரண்டு அணிகளும் மோதும் தொடரை தீர்மானிக்கும் இறுதி ஒருநாள் போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளது.