இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளுக்கு 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
செயிண்ட் ஜியார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், இந்திய அணி சார்பில் அக்சர் படேல் 21 பந்துகளில் 27 ஓட்டங்களையும் திலக் வர்மா 20 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றார்.
தென்னாப்பிரிக்க அணி சார்பில் பந்துவீச்சில் ஜெரால்ட் கோட்ஸி, மார்கோ ஜான்சன், ஆண்டிலே சிமெலேன், நக்பா பீட்டர் மற்றும் அணித் தலைவர் ஐடன் மார்க்ரம் தலா 1 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினார்.
125 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 19 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
தென்னாப்பிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், தென்னாப்பிரிக்க அணி சார்பில் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 21 பந்துகளில் 24 ஓட்டங்களையும் ஜெரால்ட் கோட்ஸி ஆட்டமிழக்காமல் 9 பந்துகளில் 19 ஓட்டங்களையும் பெற்றார்.
இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
இப் போட்டியின் நாயகனாக தென்னாப்பிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அசத்திய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தெரிவாகினர்.
இரண்டு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.