அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரினை பாகிஸ்தான் அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 31.5 ஓவர்கள் சகல விக்கட்டுக்களையும் இழந்து 140 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சீன் அபோட் 41 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும் அவுஸ்திரேலிய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மேட் ஷார்ட் 30 பந்துகளில் 22 ஓட்டங்களையும் ஆடம் ஜம்பா 22 பந்துகளில் 13 ஓட்டங்களையும் பெற்றார்.
பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் ஷஹீன் அப்ரீடி மற்றும் நசீம் ஷா 3 விக்கெட்டுக்களையும் ஹரீஸ் ரவுப் 2 விக்கெட்களையும் முஹம்மது ஹஸ்னைன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
141 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 26.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சைம் அயூப் 52 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், பாகிஸ்தான் அணி சார்பில் அப்துல்லா சபீக் 53 பந்துகளில் 37 ஓட்டங்களையும் அணித் தலைவர் முஹமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்றார்.
அவுஸ்திரேலிய அணி சார்பில் பந்துவீச்சில் லான்ஸ் மோரிஸ் விக்கெட்களை வீழ்த்தினர்.
இப் போட்டியின் நாயகனாக பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய ஹரீஸ் ரவுப் தெரிவாகினார்.
இத் தொடரின் நாயகனாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரீஸ் ரவுப் தெரிவாகினார்.