இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரினை இரண்டு அணிகளுக்கு 1:1 என்ற கணக்கில் சமன் செய்தது.
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களைப் பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக வில் யங் 32 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், நியூசிலாந்து அணி சார்பில் ஜோஷ் கிளார்க்சன் 25 பந்துகளில் 24 ஓட்டங்களையும் அணித் தலைவர் மிட்சல் சான்ட்னர் 24 பந்துகளில் 19 ஓட்டங்களையும் பெற்றார்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும் மதீஷ பத்திரன 3 விக்கெட்களையும் நுவன் துஷார 2 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
109 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு களமிறங்கிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 103 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக பெதும் நிஸ்ஸங்க 51 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், இலங்கை அணி சார்பில் பானுக ராஜபக்ஷ 13 பந்துகளில் 15 ஓட்டங்களையும் மஹீஷ் தீக்ஷன 16 பந்துகளில் 14 ஓட்டங்களையும் பெற்றார்.
நியூசிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் கிளன் பிலிப்ஸ் மற்றும் லாக்கி பெர்குசன் தலா 3 விக்கெட்களையும் மைக்கல் பிரேஸ்வெல் 2 விக்கெட்களையும் அணித் தலைவர் மிட்சல் சான்ட்னர் மற்றும் சக்கரி ஃபோல்க்ஸ் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
இப் போட்டியின் நாயகனாக நியூசிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய லாக்கி பெர்குசன் தெரிவாகினர்.
இத் தொடரின் நாயகனாக தொடர் முழுவதும் பந்துவீச்சில் அசத்திய இலங்கையின் வனிந்து ஹஸரங்க தெரிவாகினர்.