
கொட, நாகஹவத்த பிரதேசத்தில் காரில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.நேற்று (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 32 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது உயிரிழந்த நபரின் ஒன்றரை வயது மகளும் மனைவியும் காரில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.