
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சொகுசு வீடுகளை வழங்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள கணிசமான செலவுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மாதாந்தம் 2 மில்லியன் ரூபா பெறுமதியான அரசாங்கத்திற்கு சொந்தமான வீட்டில் வசிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாதாந்தம் 0.9 மில்லியன் ரூபா பெறுமதியான வீடொன்றில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வீடு தொடர்பில் மாதாந்தம் 4.6 மில்லியன் ரூபா பெறுமதியானதாகவும் அது ஒரு ஏக்கருக்கும் அதிகமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்க வீடொன்றை ஏற்காத முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நன்றி தெரிவித்ததுடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அரசாங்க வீட்டை அண்மையில் கையளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாசவும் சில காலத்திற்கு முன்னர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை திருப்பி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், அரசியல்வாதிகளுக்கான தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கு தமது நிர்வாகத்தின் அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.