இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் DLS முறைப்படி அவுஸ்திரேலிய அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரினை அவுஸ்திரேலிய அணி 3:2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கவுண்டி மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 309 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக பென் டக்கெட் 91பந்துகளில் 107 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும் இங்கிலாந்து அணி சார்பில் அணித் தலைவர் ஹாரி புரூக் 52 பந்துகளில் 72 ஓட்டங்களையும் பில் சோல்ட் 27 பந்துகளில் 45 ஓட்டங்களையும் பெற்றார்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்களையும் ஆரோன் ஹார்டி, ஆடம் ஜம்பா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

310 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 20.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.

தொடர்ந்தும் மழையின் இடையூறு காரணமாக DLS முறைப்படி அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித் மேட் ஷார்ட் 30 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும், அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 36 ஓட்டங்களையும் டிராவிஸ் ஹெட் 26 பந்துகளில் 31 ஓட்டங்களையும் பெற்றார்.

இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் ஜேக்கப் பெத்தேல் மற்றும் மேத்யூ பாட்ஸ் தலா 1 விக்கெட்கள் வீதம் வீழ்த்தினார்.

இப் போட்டியின் நாயகனாக அவுஸ்திரேலிய அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய டிராவிஸ் ஹெட்தெரிவாகினார்.

இத் தொடரின் நாயகனாக அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவாகினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *