
உக்ரைனின் அடுக்குமாடிக் கட்டிடத்தின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைனின் பெரிய நகரமான சுமியில் நேற்று (30) ரஷ்யா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் குறித்த பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடமானது சேதம் அடைந்தது.
குறித்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
அத்தோடு 13பேர் காயமடைந்தனர். இதனால் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் வசித்த 120 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அத்தோடு இரவு நேரங்களில் ரஷ்யா ஏவிய 80க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உக்ரைன் இராணுவம் சுட்டு வீழ்த்தியது.