
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தபடி, அதிக நேரம் ‘ஸ்பேஸ் வோக்’ ( Space walk ) செய்து புதிய சாதனை படைத்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ். சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நேரம் ‘ஸ்பேஸ் வோக்’ செய்த பெண் என்ற சாதனைக்கு சுனிதா வில்லியம்ஸ் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
மிகுந்த பாதுகாப்புடன் நடந்த ‘ஸ்பேஸ்வோக்’ 5 மணி நேரம் 26 நிமிடங்கள் நீடித்தன.
9ஆவது முறையாக ஸ்பேஸ் வோக் செய்துள்ள சுனிதா வில்லியம்ஸ், இதுவரை விண்வெளியில் மட்டும் 62 மணி நேரம் 6 நிமிடங்களைக் கழித்துள்ளார்.
சுனிதாவில்லியம்ஸ்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.