
தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் மூலம் பொலிஸ் திணைக்களத்தில் உள்ளவர்களுக்கே அதிக தண்டனைகளை வழங்கியுள்ளார்.
வளமான இலங்கை மூலம் அனைவரின் இலக்குகளையும் நிறைவேற்றுதல்.
இந்த நாட்டில் இனி இன மோதல்கள் இல்லை.இனிமேல் மதம், இனம், பாலினம், வேறு எதுவும் பிரிக்கும் காரணியாக இருக்காது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களையும் எங்களுடன் இணைய அழைக்கிறோம்.
இலஞ்சமற்ற சமூகம்இலஞ்சம் பெறும் அனைவரும் அஞ்சும் ஒரு சமூகத்தை உருவாக்குதல்.
முதலீட்டாளர்களிடமிருந்து இலஞ்சம் பெற்றால் அவர்களில் யாரையும் நாங்கள் மன்னிக்க மாட்டோம்.
ஊழலின் மூல காரணத்தை முதலில் களைய வேண்டும்.பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்நாம் அனைவரும் ஒன்றாக ஒரு நீண்ட மற்றும் உறுதியான பயணத்தை மேற்கொண்டுள்ளோம்.
நமது பொருளாதாரம் மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளது, அங்கிருந்து நமது பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
எனவே, வரவு செலவுத் திட்ட கொள்கைகளை கவனமாகப் படிக்குமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
அவை எனது தனியான முயற்சி அல்ல, மாறாக நமது அரசாங்கத்தின் கூட்டு முயற்சி.நமது அரசாங்கத்தில் பலர் நாடாளுமன்றத்திற்கு புதியவர்கள் .
எனினும், அவர்களுக்கு நடைமுறை அறிவும் அனுபவமும் இருக்கிறது.அரசு வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்வரி வசூல் தொடர்பான ஒழுங்குமுறை மற்றும் சட்ட கட்டமைப்புகளை வலுப்படுத்துதல்.
அரசு வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன.நாணயங்களும், பணத்தாள்களும் இல்லாத ஒரு சகாப்தத்தை நோக்கி இலங்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஊழலைத் தவிர்க்க இது ஒரு நல்ல முடிவு. இந்த முடிவுகளால் முறைகேடாக சொத்துக்களை குவிப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
வரி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வரி முறை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது.
அதிகாரிகளுக்கு தேவையான ஆதரவை நாங்கள் வழங்குவோம். நாட்டுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்.வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாய்க்கும் நாங்கள் சட்டத்தை நிலை நாட்டுவோம். வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் உத்தரவாதமாக வழங்கப்படும்பொது-தனியார் கூட்டாண்மைக்கான புதிய சட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்பு ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் மூன்று கட்டங்களாக அதிகரிக்கப்படும்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் உத்தேச நாளாந்த ஊதியம் உத்தரவாதமாக வழங்கப்படுதல்