
கடந்த பெப்ரவரி மாதம் 2 இலட்சத்து 32ஆயிரத்து 341 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 34,006 பேர் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவிலிருந்து 29,241 பேரும், பிரிட்டனிலிருந்து 29,241 பேரும், ஜெர்மனியிலிருந்து 16,720 பேரும், பிரான்சிலிருந்து 15,063 பேரும் நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாக வந்துள்ளனர்.
அதன்படி, இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 485,102 என்று சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.