
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீதிமன்றம் இன்று (05) நீக்கியுள்ளது.
பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மற்ற மதங்களைப் பற்றி இழிவான அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கில், போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் எதிர்காலத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அத்தகைய அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையையும் நீதிமன்றம் விதித்திருந்தது.