
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்றய தினம் (05.03.2025) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவளிப்பதாக ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.