
கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 42 நீர்த்தேக்கங்கள் இன்று (12) காலை நிலவரப்படி நிரம்பியுள்ளதென்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அம்பாறை மாவட்டத்தில் 7 முக்கிய நீர்த்தேக்கங்கள், அனுராதபுரம் மாவட்டத்தில் 6 முக்கிய நீர்த்தேக்கங்கள், பதுளை மாவட்டத்தில் 5 முக்கிய நீர்த்தேக்கங்கள், பொலன்னறுவை மாவட்டத்தில் 3 நீர்த்தேக்கங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 3 நீர்த்தேக்கங்கள் உட்பட மொத்தம் 42 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னேரியா, கவுடுல்ல, கந்தளாய், ராஜாங்கன, லுனுகம்வெஹெரை நீர்த்தேக்கங்கள் மற்றும் சேனநாயக்க சமுத்திரம் மற்றும் பராக்கிரம சமுத்திரம் ஆகியவைய இந்த நீர்த்தேக்கங்களில் அடங்கும் என்று திணைக்களம் கூறுகின்றது.