
அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடங்கிய வேலைநிறுத்த போராட்டம் நாளை (13) காலை 8 மணி வரை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சுகத் சுகததாச இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
”இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். குறித்த வேலைநிறுத்தம் நாளை காலை 8 மணிக்கு முடிவடையும்.
இது போன்ற விடயங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உறுதியாக உள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பாக இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.