
மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை மிதிகம பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிஸ்டல் வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி ஐந்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
வீட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்தன.
மிதிகம, பத்தேகம பகுதியில் வசிக்கும் 28, 40 மற்றும் 41 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.