நாட்டிலுள்ள அனைத்து தனிநபர்களுக்கும் டிஜிட்டல் தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சமந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் நேற்று (24.03.2025) நடைபெற்ற தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் செயல்முறை 15 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பம் நிறுவனம், பதிவாளர் நாயகம், ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் பிற அரசுத் துறைகளால் ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டில் அத்தியாவசியமான பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு தரவு அமைப்பு என்ற அடிப்படை தரவு அமைப்பு சட்டப்பூர்வமாக டிஜிட்டல் வடிவத்தில் உருவாக்கப்பட்டால், கடவுச்சீட்டு அடையாள அட்டை அல்லது வேறு எதையும் பெற்றாலும் இந்த தரவு அமைப்பு மற்ற அனைத்து செயல்முறைகளுக்கும் உதவியாக இருக்கும்.நாடு முழுவதும் 45 மில்லியன் ஆவணங்களிலிருந்து தரவை ஸ்கேன் செய்து உள்ளிடுவதன் மூலம் இந்த செயல்முறையை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த திட்டம் இப்போது துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில், அனைத்து இலங்கை குழந்தைகளுக்கும் பிறக்கும் போது ஒரு அடையாள எண் வழங்கப்படும்.

குழந்தை தொடர்பான அனைத்து தரவையும் உள்ளடக்கிய ஒரு தரவுத்தள அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு இது மிகவும் முக்கியமானது.

அப்போதுதான் ஒழுங்கற்ற செயல்முறைகளைக் குறைத்து, குடிமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்.

டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழின் ஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், அது சிங்களம் மற்றும் ஆங்கிலம் உட்பட இரண்டு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *