
நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம் நிலவும் என்பதால் அதிகளவில் தண்ணீரை பருகுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் வெப்பநிலை உயர்வாக உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மனித உடலை நீண்ட நேரம் வெப்பத்தில் வெளிப்படுத்துவது நீரிழப்பு, தசைச் சிதைவு, அதிகப்படியான சோர்வு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுபோன்ற கடுமையான வெப்பநிலை தொடர்ந்தால், பொதுமக்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும், கடுமையான செயல்பாடுகளை குறைக்கவும், நிழலான பகுதிகளில் தங்கவும் திணைக்களம் அறிவுறுத்துகிறது.