
உள்ளூராட்சி தேர்தலுக்கு இன்னும் சிறு நாட்களே உள்ள நிலையில் எமது சமகி ஜன பலவேகய கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, கிராமங்களில் தற்போது எமக்கு முன்பிருந்ததை விட அதிக வரவேற்பு மற்றும் ஆதரவு கிடைத்து வருகின்றது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்
அதேபோல் ஆளுங்கட்சிக்கு தற்போது மக்களின் செல்வாக்கு குறைந்து வருவது புலனாய்வு தகவல்கள் மூலம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதால் அவர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள்.
ஆளும் கட்சி வெற்றி பெறும் சபைகளுக்கு மட்டுமே நாம் பணம் ஒதுக்குவோம் போன்ற விடயங்களை கூறி மக்களை ஏமாற்ற ஜனாதிபதி மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறார்.
அதேவேளை அவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாவதற்கு ரணில் விக்ரமசிங்க தான் காரணம் அவர் இல்லாவிட்டால் அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி ஆகி இருக்கவும் மாட்டார்.
நாங்கள் தற்போது உள்ளூராட்சி சபை தேர்தல்களில் மக்கள் ஆதரவை அதிகமாக பெற்று அவற்றை கைப்பற்றவே வேலை செய்கிறோம். அதேவேளை உள்ளூராட்சி மன்றங்களில் நாம் அமோகமான இடங்களில் வெற்றியை பெற்று விட்டு ஆகஸ்ட், செப்டம்பர், ஒக்டோபர் என்று கூற முடியாது மிக விரைவிலேயே சஜித் பிரேமதாசாவை இந்த நாட்டின் ஜனாதிபதி ஆக்க நாம் முயற்சிக்கிறோம் – எங்களுக்கு முடியும் என்றால் நாம் அவரை அடுத்த மாதமே ஜனாதிபதி ஆக்குவோம் ஆனால் அதற்கு சில வழிமுறைகள் உள்ளது, சும்மா சென்று ஜனாதிபதி கதிரையில் அமர முடியாது .
இந்த நாட்டு மக்களும் இந்த அரசாங்கத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் அதன் பின்னர் விரைவிலேயே நாம் சஜித் பிரேமதாசாவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்