தற்போதைய மதுவரி ஆணையாளர் நாயகம் பதவியில் ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றும் ஜே.எம். குணசிறி சேவையை உடனடியாக அமுலாகும் வகையில் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக சேவையாற்றும் உள்நாட்டு இறைவரி சேவையின் விசேடதர அலுவலர் யு.டி.என். ஜயவீரவை உடனடியாக அமுலாகும் வகையில் மதுவரி ஆணையாளர் நாயகம் பதவி கடமைகளை நிறைவேற்றுவதற்காக நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.