“பாராளுமன்ற உறுப்பினர்களின் தவறான நடத்தைக்கு எதிராக பொது மக்களின் கருத்துக்கள் உருவாக்கப்பட்ட சூழ்நிலையில், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இருந்து ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியின் பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்களான நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் பாராளுமன்ற அமர்வுகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவை நோக்கி அவர் அமர்ந்திருந்த மேசையை முட்டிக்கொண்டு நாற்காலியை தூக்கி அவருக்கு எதிராக கூச்சலிட்டதைத் தொடர்ந்து இந்த இரண்டு எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி மற்றுமொரு சம்பவத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டதற்கு எதிரான வாய்த்தர்க்கத்தில் பாராளுமன்றத்தில் தண்டாயுதத்தை பிடித்ததற்காக நிலையியற் கட்டளை 77(3) இன் படி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும நான்கு வாரங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களின் நூலகத்திற்கு அருகில் தகராறு செய்ததற்காக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் பாராளுமன்றத்தில் இருந்து ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டனர்.
மேலும் தங்கக் கடத்தல் வழக்கில் அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற வருகை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டது.
பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷவினால் 2024 ஜனவரி 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த இடைநிறுத்தம் விதிக்கப்பட்டது.