உலகில் வாழும் குழந்தைகளில் சராசரியாக மூன்று குழந்தைகளில் ஒருவருக்கு கண் பார்வை பிரச்சினை உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் கண்பார்வை படிப்படியாக மோசமடைந்து வருவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் காலத்தில் அதிகமான குழந்தைகள் கையடக்கத் தொலைபேசி திரைகளைப் பார்க்கப் பழகியமையே இதற்கு முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை என்பது வளர்ந்து வரும் நாடுகளில் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், இது 2050 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான குழந்தைகளை பாதிக்கும் என்று ஆய்வு எச்சரிக்கின்றது.
ஜப்பானில் 85%, தென் கொரியாவில் 73% மற்றும் ரஷ்யாவில் 40% குழந்தைகள் கிட்டப்பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.