நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையில் வாகனங்களை இறக்குமதி செய்வதை சரியான முறைமைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வாகன இறக்குமதிக்கு இடமளிக்குமாறு பெரும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானம் காணப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வாகன இறக்குமதியோ, வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதியோ மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் வரிச்சலுகையுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான புதிய தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இடம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாகவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.