எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதி தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்கள் மற்றும் உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகளின் விநியோகம் சம்பந்தமாக ஏற்கனவே உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தபால் மூல வாக்காளர் இடாப்புக்கள் நாளை (16) அத்தாட்சிப்படுத்தப்படுவதுடன், தபால் மூல வாக்காளர் அட்டை விநியோகம் 2024.10.23ஆம் திகதி மேற்கொள்ளப்படும்.
அதன்படி, தபால் மூல வாக்காளர்கள் மாவட்ட செயலக வளாகத்திலுள்ள அனைத்து அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் 2024.10.30 மற்றும் 2024.11.04 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.
இத்தினங்களில் தபால் மூல வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு 2024.11.07 மற்றும் 08 ஆகிய தினங்களில் தாம் பணிபுரிகின்ற இடம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களில் அஞ்சல் வாக்கு அடையாளமிடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகளை 2024.10.26ஆம் திகதி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமான 2024.10.27, 31 மற்றும் 2024.11.03 ஆம் திகதிகளில் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகளின் விநியோகம் 2024.11.07 ஆம் திகதி முடிவடையும்.
2024.11.07 ஆம் திகதிக்குப் பின்னர் உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்களுக்கு 2024 தேருநர் இடாப்பில் பதிவுசெய்யப்பட்ட முகவரிக்கு உரிய அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று தனது ஆளடையாளத்தை வெளிப்படுத்திய பின்னர் உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது இத்தால் அறிவிக்கப்படுகிறது.