பொதுத் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 65 இலட்சம் வாக்குகளைப் பெறுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிக்கு அடுத்த பொதுத் தேர்தலில் அதிக அனுகூலங்கள் கிடைக்கும் எனத் தெரிவித்த SP திஸாநாயக்க, பொதுத் தேர்தலில் அந்த நன்மையை தேசிய மக்கள் சக்தி பெறும் எனவும் குறிப்பிட்டார்.
பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டால் பலமான எதிர்க்கட்சியொன்றை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் திசையில் அநுரகுமார செல்லக்கூடியதாகத் தெரிகின்றது எனவும் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.